Sunday, August 26, 2012

புழுதி


எல்லோரும் புழுதியைத் துடைத்துவிட்டு
உட்கார்கிறார்கள்
நான் புழுதியின்மீதே உட்காருகிறேன்

நானும் புழுதி என்பதும் ஒன்று

என் மேலும் படியட்டும் புழுதி என்பது
இன்னொன்றாக இருக்கலாம்

உலகத்தில் துடைக்க முடியாதது
எவ்வளவோ வேறு இருக்கிறது
என்னையும் புழுதியையும் தவிர

காதலால்..!

அமைதியாக 
இருக்க நினைத்து 
தோற்றுக் கொண்டிருக்கிறது
மனது

வார்த்தைகள் தொலைத்து
விழிகளில் உருவாகி
மௌனத்தால் கருவாகி
இதயத்தால் உயிரூட்டப்பட்ட
காதலால்..!

உடைந்த நிலாக்கள்


நான் சுகம் நீயும்....

இறந்த உடலைக்கூட
புணர நினைக்கும் உலகில்
என் இருப்பை
என் நலத்தை
எப்படித் தீர்மானிக்க முடிகிறது
உன்னால்.

கை கோர்க்க நீயானானாலும்
பறித்திழுக்கும் சமூகத்தில்
எப்படி....
என் வாழ்வின் இருப்பை
நுகர்வாய் நீ.

வௌவாலாய் தொங்கும் உலகில்
எனக்கு உலகமும்
உலகத்துக்கு நானும்
தலைகீழாய்த்தான்.

உள்ளதை உள்ளபடி
ஏதாவது எழுதலாம் என்றால்
இருளுக்குள் கௌவும்
எத்தனை எத்தனை
அசிங்க உணர்வுகள்
ஆபாசமாய்.

பாம்புச் செட்டையாய்
பிறந்த இனம் குணம்
ஏன் மதத்தைக்கூட மாற்றும்
பச்சோந்திக் கூட்டத்துள்
சிதறிய பரவசங்களோடு.

என்னைப் புரியாத உறவு
மனதைப் புரியாத நட்பு
விலக நினைக்கும் ஆனந்தம்
தூரமாய் நிற்கும் காதல்.

எனக்கான
அழகான ஓர் உலகத்துள்
நான் மட்டுமே.

தவம் செய்கிறேன்
கண்களைக் கழற்றி
காற்றில் கொழுவி
பொய்யாய்த் தொங்காத
ஒரு மனிதனுக்காக.

P.vijai.

About Me

குறை இல்லாத மனிதன் இல்லை. அதை குறைக்க தெரியாதவன் மனிதனே இல்லை..